தேனி மாவட்டம் லட்சுமிபுரம் ஒருங்கிணைந் நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உரிய நேரத்தில் அரசு பேருந்து நின்று செல்லமுடியவில்லை அதனால் புதிய வெளியூர்மாணவர்களை சேர்க்க இயலாது என பள்ளியின் தாளாளர் அலட்சியம் காட்டுவதாக தகவல்.
பள்ளி கல்வித்துறை பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து ஆர்வமுடன் படிக்க வரும் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என
ஏழை மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்பார்ப்பு
பெரியகுளத்தில் இருந்து தேனி செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி இந்த பள்ளியில் லட்சுமிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து பல நூறு ஏழை விவசாய கூலித்தொழிலை நம்பி வாழும் பெற்றோர்களின் - மாணவிகள் மற்றும் மாணவர்கள் சைக்கிள் மற்றும் பேருந்துகளில் வருகை தந்து படித்துவிட்டு மீண்டும் சைக்கிள் .பேருந்து மற்றும் பல்வேறு வாகனங்களில் செல்கின்றனர்
அதே சமயம் பள்ளியின் எதிரே மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளதால் பல பேருந்துகள் நின்று செல்வதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்து நிர்வாகம் செய்துள்ளது .
இதனால் பல நூறு மாணவர்கள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர் இந்நிலையில் இந்த ஆண்டு லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய மாணவர்களை சேர்க்கும் பணி தொடங்கியுள்ளது தற்போது பெரியகுளம்மற்றும் அருகில் உள்ள ஊர்களில் இருந்து புதிய மாணவர்களை சேர்க்க வரும் பெற்றோர்களிடம் பள்ளிக்கூடம் முன்பு உரிய பள்ளி நேரத்தில் அரசு பேருந்து வருவதில்லை அதனால் மாணவ - மாணவிகளை சேர்க்க முடியாது என பள்ளி முதல்வர் கராராக கூறுவதாக பெற்றோர்கள் புலம்புகின்றனர்-
அதனால் நன்றாக படிக்க விரும்பும் மாணவர்கள் நலனை கருதி - தேனி மாவட்ட பள்ளிகல்வித் துறை உரிய நடவடிக்கை எடுத்தும் - அதேசமயம் மாணவர்களுக்கு காலை நேரத்தில் பள்ளி முன்பு பேருந்து நின்று செல்லவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றன்
செய்தியாளர்- பால்ராஜ்
No comments:
Post a Comment