தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் அங்கு பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவமனைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
போராட்டம் நடத்தி வருகின்ற ஒப்பந்த பணியாளர்களிடம் மருத்துவமனை இணை இயக்குனர் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை
போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார்கள்
அரசு-இம்மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் அரசுவழங்கிய 15 ஆயிரம் ரூபாயை தராமல் ஏமாற்றிய மருத்துவ நிர்வாகம் அதனை உடனடியாக பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்
அரசு அறிவித்துள்ள சம்பள பட்டியலில் உள்ளபடி உரிய சம்பளத்தை வழங்க வேண்டும்
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் எங்களுக்கு உரிய மதிப்பு தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் தொடர்வதாக அறிவித்துள்ளனர்
தமிழக சட்டப்பேரவை நடைபெறும் இந்த நேரத்தில் அரசு மருத்துவமனைக்குள் நடைபெறும் இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
இந்தப் போராட்டத்தால் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறும் வெளி நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள்
செய்தியாளர்: பால்ராஜ்
No comments:
Post a Comment