பரபரப்பான சூழ்நிலையில் நடந்து முடிந்த தேனி நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் இறுதி கட்ட முடிவு - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 5 June 2024

பரபரப்பான சூழ்நிலையில் நடந்து முடிந்த தேனி நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் இறுதி கட்ட முடிவு

 


பரபரப்பான சூழ்நிலையில் நடந்து முடிந்த தேனி நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் இறுதி கட்ட முடிவு



இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளை திமுக கைப்பற்றினாலும் மிக முக்கியமான தொகுதிகளாக பார்க்கப்பட்டது கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி மற்றும் தேனி நாடாளுமன்ற தொகுதி என்பதாகும்



இதில் தேனி நாடாளுமன்ற தொகுதி மிக முக்கியமான தொகுதியாக பார்க்கப்பட்டது அதற்கு காரணம் முன்னாள் முதல்வரும் மறைந்த ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓ பி ரவீந்திரநாத் குமார் கடந்த முறை வென்ற தொகுதி என்பதாகும் அதையும் கடந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் முன்னாள் தேனி நாடாளுமன்ற உறுப்பினரான டிடிவி தினகரன் போட்டியிட்டது தான் இதற்கு காரணம்



தேனி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த முறை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் இந்த முறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டார் இந்த முறை கடுமையான பிரச்சாரத்தினை அதிமுக .அம்மாமக்கள் முன்னேற்ற கழகம் திமுக என முன்னெடுத்து சென்றார்கள்.இந்த தேர்தலில் திமுகவின் திட்டமான குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் என்ற திட்டம் மிகப்பெரிய கை கொடுத்தது



தேனி நாடாளுமன்ற தொகுதியில் திமுகவின் இளைஞர் அணி தலைவரும் விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைச்சருமான உதயநிதி அவர்கள் பிரச்சாரத்தில் மக்களை கவரும் விதமாக பல்வேறு அரசு திட்டங்களை விளக்கி மக்களிடத்திலே பேசினார் இந்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றது



யார் வெல்வார் தேனி மக்கள் எதிர்பார்ப்பு



பரபரப்பான தேர்தல் களத்தில் நேற்று தேனி கம்மவார் கல்லூரியில் காலை 8 மணிக்கு வாக்குகளை என்ன தொடங்கினார்கள் முதலில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும்பொழுது முதல் சுற்றிலேயே திமுக அதிகவாக்குகளை பெற்றது இரண்டாவது இடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் குறைந்த அளவு வாக்குகளை பெற்றது மூன்றாவது இடத்திற்கு வந்த அதிமுக இரண்டு இலக்க எண்ணிலையே வாக்குகளை பெற்று இறுதிவரை நீடித்தது



தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியகுளம் ஆண்டிபட்டி போடி கம்பம் சோழவந்தான் உசிலம்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் தனித்தனியாக எண்ணப்பட்டு மாலை 6 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன இதில் 2 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று தங்க .தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார் வெற்றி பெற்ற திமுக நாடாளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு பெரியகுளத்தில் உள்ள கூட்டணி கட்சி சேர்ந்த நிர்வாகிகள் பலர் தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்



டெபாசிட் இழந்த அதிமுக சோகத்தில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஆரம்பம் முதல் இறுதி வரை அதிமுக குறைந்த அளவு வாக்குகளை பெற்று வந்ததைத் தொடர்ந்து அதிமுக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் முகம் சோர்ந்து வெளியே செல்ல தொடங்கினார்கள் இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட நாராயணசாமி அவர்கள் பாதியிலேயே வாக்கு இன்னும் மையத்தை விட்டு வெளியே சென்று விட்டார் அதேசமயம் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரியகுளத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த அதிமுக இந்த முறை டெபாசிட் இழந்தது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது



அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளரான டிடிவி தினகரன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு குறைந்த அளவு வாக்குகளையே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது



இந்த தேர்தலில் திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை காட்டிலும் பெரியகுளம் நகரசெயலாளர் கே முகமது இலியாஸ் தலைமையிலான தேர்தல் பொறுப்பாளர்களின் சரியான வியூகத்தின் படி அதிக வாக்குகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது



செய்தியாளர்: பால்ராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad