கோவையில் நடந்த உலக சிலம்பம் போட்டியில் சாதித்த ஆண்டிபட்டி மாணவர்களுக்கு பாராட்டு விழா. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 7 June 2024

கோவையில் நடந்த உலக சிலம்பம் போட்டியில் சாதித்த ஆண்டிபட்டி மாணவர்களுக்கு பாராட்டு விழா.


 கோவையில் நடந்த உலக சிலம்பம் போட்டியில் சாதித்த ஆண்டிபட்டி மாணவர்களுக்கு பாராட்டு விழா.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள 11 மாணவர்கள் கோவை எஸ்,என்,எஸ். கல்லூரியில் நடந்த உலக சிலம்பம்  போட்டியில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை  பெற்றதற்காக ஆண்டிபட்டி அருகே உள்ள கன்னியப்பிள்ளைபட்டி பயிற்சி மையத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.


 விழாவிற்கு தொழில் அதிபர் திருமுருகன் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவ ,மாணவிகளுக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். அவர்களை பயிற்றுவித்த பயிற்சியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இந்நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட அமைச்சூர் கிக் அசோசியேசன் செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார் .பயிற்சியாளர் ஆனந்த வேல்முருகன் வரவேற்று பேசினார்.


 இதுகுறித்து துரைமுருகன் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, உலக சிலம்பம் போட்டி கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் இந்தியா,மலேசியா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அதில் எங்களிடம் பயிற்சி பெற்ற தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த 11 மாணவர்கள் கலந்து கொண்டனர்.


 அதில் ஒற்றை சிலம்பம் ,இரட்டை சிலம்பம் ,சுருள்வாள் போட்டிகளில் 4 பேர் தங்கப்பதக்கம் ,10 பேர் வெள்ளி பதக்கமும், 6 பேர் வெண்கல பதக்கமும் பெற்று வெற்றி பெற்றனர். அவர்களை பாராட்டுவதில் தேனி மாவட்ட அமெச்சூர் கிக் அசோசியேசன் பெருமை கொள்கிறது என்று கூறினார். 


விழாவில் மாணவ மாணவிகள் சிலம்பம் ஆடி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இதில் மாணவர் மாணவிகள் ,பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


 துணை பயிற்சியாளர்கள் வரதராஜன், ஜெயவேல் ஆகியோர் நன்றி தெரிவித்து பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad