பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைகளை சீர்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்து அளவீடு செய்யும் பணி துவக்கம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நூற்றாண்டு பாரம்பரியமிக்க நகராட்சியாகும். இந்நகராட்சியில் மு.மேத்தா அவர்களால் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. பாதாள சாக்கடைகளில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதாலும், மழை காலங்களில்,பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த சாலைப் பணிகளாலும் பாதாளசாக்கடைகள் மூடப்பட்டும் இருந்து வந்தது. நகரின பல பகுதிகளிலும் சாலைகளில்ஏற்றம் இறக்கம் காணப் படுவதாலும் சாக்கடை கழிவு நீர் பாதாள சாக்கடை வழியாக செல்வதில் பாதிப்பு ஏற்பட்டு, அவை வராகநதி ஆற்றில் கலக்கப்பட்டு வந்தது. இதனால் வராக நதி ஆறு மாசடைந்து வருகின்றது. நகரின் தூய்மை காக்கவும், வராகநதி ஆற்றின தூய்மை காக்கும் வகையில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆலோசனையின் கீழ் பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் அவர்களது வழிகாட்டுதலின் படி பெரியகுளம் நகராட்சி வளர்ச்சி திட்டப் பணிகளின் கீழ் பாதாள சாக்கடைகளை அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ள அளவீடு பணிகள் முழுமை பெற்ற பின் பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடைகுழாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன் பாதாள சாக்கடைகள் சீர்படுத்தப்படும் என நகர்மன்ற தலைவர் தெரிவித்தார். பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாதாள சாக்கடை ஆய்வு பணியின் போது நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள், சுந்தர பாண்டியன், முகமது அலி, அப்துல் மஜீத், ராஜ்குமார், பணிமேற்பார்வையாளர் கணேசன் உட்பட பலர் இருந்தனர்.
செய்தியாளர்- K. பால்ராஜ்
No comments:
Post a Comment