ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளி சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் .
ஆண்டிபட்டி ,ஜூலை.16 - தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி லிட்டில் பிளவர் பள்ளி மாணவர்கள் சார்பில் காமராஜர் 122 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை தாங்கினார்.
பள்ளி மாணவர்களின் பேண்டு வாத்தியம் முழங்க நடைபெற்ற ஊர்வலத்தை பள்ளி நிர்வாகி தமயந்தி, செயலர் மாத்யூ ஜோயல் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
ஊர்வலம் ஆண்டிபட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துவங்கி மதுரை தேனி சாலையில் வந்து பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
ஊர்வலத்தில் வந்த பள்ளி மாணவ மாணவிகள் காமராஜரின் விடுதலைப் போராட்ட தியாகங்கள், கல்வி சேவைகள் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய தொண்டுகள் குறித்து பதாதைகளை கைகளில் ஏந்தி ,அவரது ஆள் உயர உருவப்படத்தை தூக்கி வந்து கோஷங்களை எழுப்பி வந்தனர்.
பின்பு பேருந்து நிலையத்தில் முடிவடைந்த ஊர்வலத்தில் காமராஜர் குறித்து பள்ளி மாணவ மாணவிகள் சிறப்புரை ஆற்றினார்கள்.
இதையடுத்து ஊர்வலமாக சென்று ஆசிரியர்களும் ,மாணவர்களும் கடைவீதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி தலைமையில் ,ஆசிரியர்கள் பூமா, கவிதா, ராகினி, பாண்டிச் செல்வி, திவ்யா , இசைக்குழு பயிற்சியாளர் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment