ஆண்டிபட்டி அருகே பொம்மி நாயக்கன்பட்டியில் பகவதி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் அமைந்திருக்கும் அருள்மிகு பகவதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலில் முன்புறம் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது .
அதனைத் தொடர்ந்து பூர்ணாகுதி நிகழ்ச்சி நடைபெற்று, யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடாகி பல புண்ணிய ஸ்தலங்களில் இருந்து சேகரித்துக் கொண்டு வரப்பட்ட புனித நீரால் கும்பத்திற்கு அபிஷேகம் செய்யபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனையடுத்து கும்பாபிஷேகம் செய்யபட்ட புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கபட்டது.
இதையடுத்து மூலவர் பகவதி அம்மனுக்கு விபூதி, மஞ்சள் ,குங்குமம் ,பால், தயிர், தேன், இளநீர் ,பழங்கள், சந்தனம் உள்பட 21 வகையான அபிஷேகமும், ஆராதனை பூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீப ஆராதனை காட்டப்பட்டது. பழமை வாய்ந்த இக்கோவிலில் அருள் பாலிக்கும் பகவதி அம்மனை பக்தர்கள் பயபக்தியுடன் வழிபட்டனர்.
விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment