தேனியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற கோரி திமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் :
தேனி மாவட்டம் தேனியில் திமுக சட்டத்துறை மற்றும் திமுக தேனி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட வழக்கறிஞர்கள் அணி சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி தேனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மூன்று புதிய சட்டங்களை திரும்ப பெறுதல், ஜனநாயகத்திற்கு எதிராக அரசமைப்புக்கு எதிராக போலீஸ் ஆட்சியை நடைமுறைப்படுத்தும் விதமாக அமைந்துள்ள மூன்று புதிய சட்டங்களை திரும்ப பெறுதல், மாநில மொழிகளை புறந்தள்ளி சமஸ்கிருத பெயர் கொண்ட மக்கள் விரோத சட்டங்களை திரும்ப பெறுதல், அடிப்படை உரிமைகளுக்கு எதிரான சமஸ்கிருத சட்டங்களை திரும்ப பெறக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கண்டண கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தேனிவடக்கு மாவட்ட வழக்கறிஞர் அமைப்பாளர் ஆசை தம்பி தலைமை தாங்கினார். தேனி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தனுஷ்கோடி வடக்கு மாவட்ட தலைவர் பிரதீப் வடக்கு மாவட்ட துணை தலைவர் முத்துச்சாமி, வடக்கு மாவட்ட துணை அமைப்பாளர் யாஸ்மின், தெற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தெற்கு மாவட்ட துணை தலைவர் தமயந்தி, ராஜ்குமார, ராஜேஷ், ஈஸ்வரன், செல்லப் பாண்டி, சரவணன் ,உட்பட கழக வழக்கறிஞர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
செய்தியாளர்:
K. பால்ராஜ்
No comments:
Post a Comment