2026ல் எடப்பாடி பழனிச்சாமி கட்சிக்கு முடிவுரை எழுதி விடுவார். டிடிவி தினகரன் பேச்சு.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசினார். நிகழ்ச்சிக்கு அமமுக மேற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி ,கிழக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன் ஆகியோர் தலைமை தாங்கினார். ஆண்டிபட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் ,தெற்கு ஒன்றிய செயலாளர் திருமலை நாகராஜ் ஆகியோர் வரவேற்றனர் .மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் டேவிட் அண்ணாதுரை ,அமைப்புச் செயலாளர்கள் டாக்டர் கதிர்காமு ,ஸ்டார் ரபீக்,,கழக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் ராம் பிரசாத் மற்றும் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் நன்றி தெரிவித்து தினகரன் பேசியதாவது,
எடப்பாடி பழனிச்சாமிக்கு முடிவு கட்டவில்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி கட்சிக்கு முடிவு கட்டி விடுவார். அவரின் சுயநலத்தால் பதவி வெறியால் பணத்திமிரால் இன்றைக்கு தலைகால் புரியாமல் நடந்து கொண்டிருக்கிறார்.
10 தோல்விகளை சந்தித்த பிறகும் அவர் திருந்தவில்லை என்றால் ஆண்டவனாலும் அவரை காப்பாற்ற முடியாது.
இன்றைக்கு கூட பழனிச்சாமி வீட்டில் உட்கார்ந்து பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் .இங்கே சர்க்கரை நோயாளிகள் நிர்வாகிகள் தொண்டர்கள் வயதானவர்கள் உண்ணாவிரதம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
வன்னியர்களை ஏமாற்றும் விதமாக பத்தரை சதவீதம் இட ஒதுக்கீடு என்று ஏமாற்றும் விதமாக அரசாணை வெளியிட்டார்.
அப்போதே சொன்னோம் யாராவது நீதிமன்றத்திற்கு போனால் இந்த அரசாணையை நீக்கிவிடுவார்கள் என்று அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
பத்தரை சதவீதம் தருகிறேன் என்று அவர்களையும் ஏமாற்றினார். இங்கே பிற்படுத்தப்பட்ட 41 சமுதாயத்தையும், சீர்மரபினர் உள்ளிட்ட 109 சமுதாயத்தையும் ஏமாற்றி நாடகமாடினார்.அதனால் தான் இந்தப் பகுதியில் டெபாசிட் வாங்க முடியவில்லை.
ஏழு தொகுதிகளில் டெபாசிட் போயிருக்கிறது. பல தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு போய்விட்டார்கள்.நமக்கும் பழனிச்சாமி கூட்டணிக்கும் 20 லட்சம் தான் வித்தியாசம்.
ஆர் கே நகரில் இரட்டை இலையை தோற்கடிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. இங்கேயும் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பழனிச்சாமி போன்று பதவி வெறியோ ,சுயநலமும் பிடித்தவன் இல்லை நான்.
இன்னொரு கட்சி இருக்கிறது அதைப்பற்றி பேசவே வேண்டியதில்லை.எட்டப்பன் பழனிச்சாமி 2026 தேர்தலோடு கட்சியை இழுத்து மூடி விடுவார்.
இப்போது அங்கிருக்கும் நிர்வாகிகளும் தொண்டர்களும் இரட்டை இலை இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக பொறுமையாக இருக்கிறார்கள்.
அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணையும் காலம் வரும் அது 2026க்கு முன்பா, பின்பா என்பது தெரியவில்லை.அங்குள்ள தொண்டர்கள் இரட்டை இலையைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இரட்டை இலையை பழனிச்சாமி எவ்வாறு கேவலப்படுத்தி வருகிறார் ,பலவீனப்படுத்தி வருகிறார் என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் பார்க்கிறோம்.
ஆண்டிபட்டி தொகுதியில் ஒரு பைசா பணம் கொடுக்காமல் 58 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி இருக்கிறோம். ஆனால் இரட்டை இலை ஒரு சில பூத்துகளில் ஒரு ஓட்டு ,இரண்டு ஓட்டு வாங்கி இருக்கிறது.
அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் 2026 தேர்தலுக்குப் பிறகு பழனிச்சாமி அதிமுகவிற்கு முடிவுரை எழுதி விடுவார் .2026 தேர்தலில் பழனிச்சாமி பிரதமர் ஆகப் போகிறாரா ஏன் வேட்பாளரை போடுகிறார்
அவரிடம் இருக்கும் நிர்வாகிகள் தனியாக நிற்க வேண்டாம் விஷ பரீட்சை வேண்டாம் என்று கூறியும்,
வேட்பாளர்களை நிறுத்துகிறார் என்றால் நான்காண்டு ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் முறைகேடு வழக்குகள் வந்தது போல் தன் மீதும் வந்து விடக்கூடாது என்பதற்காக திமுகவோடு கள்ள உறவு கொண்டிருக்கிறார். பழனிச்சாமி சினிமாவையும் தாண்டி பெரிய நடிகராக இருக்கிறார் என பேசினார்.
மூத்தசெய்தியாளர்: தவமணி
No comments:
Post a Comment