பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில்துல்லிய தோட்டக்கலை அறிவியல் குறித்த சர்வதேச கருத்தரங்கம் : - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 August 2024

பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில்துல்லிய தோட்டக்கலை அறிவியல் குறித்த சர்வதேச கருத்தரங்கம் :


பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில்துல்லிய தோட்டக்கலை அறிவியல் குறித்த சர்வதேச கருத்தரங்கம் :


  தேனி மாவட்டம், பெரியகுளம்  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ,  மற்றும் இந்திய பொமலாஜிக்கல் சொசைட்டி ( IPS ) ஏற்பாடு செய்த ( நிலையான உற்பத்தி , உணவு மற்றும் சுற்றுச்சூழலுக்கான தொழில் நுட்பங்களை மேம்படுத்துதல் ) என்ற கருப்பொருளுடன் துல்லியமான தோட்டக்கலை பற்றிய சர்வதேச கருத்தரங்கம்  22.08.2024 முதல் 24.08.2024 வரை நடைபெற்றது . பெரியகுளத்திலுள்ள தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் , நாட்டின் , பல்வேறு பகுதிகளிலிருந்தும் , பிற நாடுகளிலிருந்தும் பல விஞ்ஞானிகள் மற்றும் அறிஞர்கள் பங்கேற்று , துல்லியமான தோட்டக்கலை பற்றிய பல்வேறு தலைப்புகளில் தங்கள் கட்டுரைகளை சமர்பித்தனர் . 24.08.2024 அன்று பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் பெரியகுளம் முதன்மையர் ஜே . ராஜாங்கம் , விஞ்ஞானிகளை வரவேற்று அவர்களது வருகை மற்றும் சிறந்த விளக்க காட்சிகளுக்காக அனைவரையும் பாராட்டினார் . புதுதில்லியின் முன்னாள் தோட்டக்கலை ஆணையர் முனைவர் . பி.என்.எஸ் . மூர்த்தி இந்த மூன்று நாள் கருத்தரங்கில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆராய்ச்சிகள் பற்றி விளக்கினார் . அவர் ட்ரோன் தொழில்நுட்பம் , பழங்கால மரங்களை பாதுகாப்பதற்கான தேவை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களின் அறுவடைக்குப் பிந்திய மேலாண்மை போன்றவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார் . கேரள மாநிலம் கோழிக்கோடு , பனை மற்றும் வாசனை திரவியங்கள் மேம்பாட்டு இயக்குநகரத்தின் இயக்குநர் , முனைவர் ஹோமி செரியன் வாழ்த்துரை வழங்கினார்.  முனைவர்  பார்த்தசாரதி , ( முன்னாள் இயக்குநர் , பனை மற்றும் வாசனை திரவியங்கள் மேம்பாட்டு இயக்குநரகம் கேரள மாநிலம் கோழிக்கோடு ) , மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தோட்டக்கலை உற்பத்தி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் உள்ள முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டியுள்ளார் . முனைவர் . சு . செல்வராஜன் ( இயக்குநர் , தேசிய வாழை ஆராய்ச்சி மையம் , திருச்சிராப்பள்ளி ) தமிழகத்தில் துல்லிய பண்ணையத் திட்டத்தின் கீழ் சொட்டுநீர்ப்பாசனம் மற்றும் திசுவளர்ப்பு வாழை சாகுபடி தொழில் நுட்பத்தின் மூலம் இரண்டு மடங்கு வாழை உற்பத்தி அதிகரித்து உலகளவில் வாழை உற்பத்தியில் முன்னோடியாக இந்தியா திகழ்கிறது . இந்த நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக புது டில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் ஜெனரல் ( தோட்டக்கலை ) முனைவர் . சஞ்சய் குமார் சிங் கலந்து கொண்டார் . தோட்டக்கலைப் பயிர்களின் நன்னறி வேளாண்மை முறையை கடைபிடித்தல் , பூச்சி மற்றும் நோய்க் கொல்லி மருந்துகள் தெளிக்காத தரமான பொருட்களை விளைவித்தால் அதிகமான அளவில் ஏற்றுமதி செய்யலாம் என எடுத்துரைத்தார் . இவ்விழாவில் தோட்டக்கலைப் பயிர்களின் சிறப்பான ஆராய்ச்சிகள் மேற்கொண்ட விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது . மேலும் வாழை மற்றும் திராட்சையில் அறுவடைக்குப்பின் தொழில் நுட்பங்கள் பற்றிய புத்தகம் மற்றும் நுாற்புழு மேலாண்மைக்கான மென்பொருள் வெளியிடப்பட்டது . இந்நிகழ்ச்சியின் நிறைவாக  இணைப் பேராசிரியர் ரவீந்திரன்   நன்றியுரையாற்றினார் . இந்த கருத்தரங்கில் இந்திய மற்றும் சர்வதேச அளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை சார்ந்த விஞ்ஞானிகள் 400 பேர் கலந்து கொண்டனர் . 


 செய்தியாளர் K.பால்ராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad