ஆண்டிபட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழா . - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 August 2024

ஆண்டிபட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழா .


 ஆண்டிபட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழா .


 ஆண்டிபட்டி, தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சக்கம்பட்டி ,வைகை சாலையில் உள்ள அண்ணா காலனி நந்தகோபால கிருஷ்ணர் ஆலயத்தில் கோகுல கண்ணனுக்கு கிருஷ்ண ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது .


   விழாவை முன்னிட்டு கண்ணனுக்கு புனித கங்கை தீர்த்தத்தில் நீராடி, திருமஞ்சனம் சாற்றி, பாசுரம் பாடி ,யாகசாலை பூஜையுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் ஏராளமானோர் கண்ணன், ராதை வேடமணிந்து கோவிலில் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள் . கிருஷ்ணர் -ராதையுடன் ஊஞ்சலில் அமர்ந்து ஆடியபடி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் குழந்தைகளை துலாபாரத்தில் அமர வைத்து பழங்கள் நாணயங்கள் மற்றும் பல்வேறு வேண்டுதல்களை செய்தனர் .விழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சண்முகசுந்தரம் மற்றும் பூசாரி கிருஷ்ண முருகேசன், நந்தகோபால கிருஷ்ணர் ஆன்மீக குழுவினர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad