வரும் சட்டமன்ற தேர்தலில் 220க்கும் மேற்பட்ட தொகுதியில் திமுக வெற்றி பெறும் ஆண்டிபட்டியில் எம்பி தங்கதமிழ்செல்வன் பேச்சு
ஆண்டிபட்டி, ஆக. 15, நடந்து முடிந்த தேனி பாராளுமன்ற தொகுதியின் திமுக சார்பில் வேட்பாளராக தங்கதமிழ்செல்வனை திமுக தலைமை கழகம் அறிவித்தது. திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு தொடர்ந்து நன்றி தெரிவித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் நேற்று மாலை ஆண்டிபட்டி பகுதிக்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்தார். முன்னதாக ஆண்டிபட்டி பகுதிக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வனை, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் வரவேற்றார். ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளான டி.பொம்மிநாயக்கன்பட்டி, டி.சுப்புலாபுரம், டி.ராஜகோபாலன்பட்டி, அணைக்கரைப்பட்டி, தர்மத்துப்பட்டி, ஏத்தக்கோவில், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் பேசுகையில், தமிழக முதலமைச்சர் மக்களுக்கு செய்த பல்வேறு நலத்திட்டங்களால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 40க்கு40 எடுத்து வெற்றி பெற்றோம். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவார். வரும் சட்டமன்ற தேர்தலில் 220க்கும் மேற்பட்ட தொகுதியில் திமுக வெற்றி பெறும். மகளிர் உரிமை தொகை ரூ.1000 கொடுத்து கொண்டிருக்கும் நிலையில், வருங்காலங்களில் 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவதற்கு வாய்ப்புள்ளது என்றார். இந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் ராமசாமி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment