மதுரை போடி புதிய ரயில் வழித்தடத்தில் முதன்முறையாக பயணம் செய்கிறேன் என்று மகிழ்ச்சி பொங்கக்கூறி சென்னைக்கு பயணம் செய்த தேனி திமுக பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அமோக வெற்றி பெற்றார்
இதையடுத்து ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக நன்றி தெரிவித்து வரும் அவர்
இன்று ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமலாபுரம் கானாவிலக்கு நாச்சியார்புரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் திமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்
நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு இன்று போடியில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயிலில் பயணம் செய்ய ஆண்டிபட்டி ரயில் நிலையத்திற்கு அவர் வந்தார்
மதுரை போடி புதிய ரயில்வே வழித்தடத்தில் தற்போது தான் முதன்முறையாக பயணம் செய்து சென்னை செல்கிறேன் என்று மகிழ்ச்சி பொங்க கூறிய அவர் கையசைத்து புறப்பட்டு சென்றார்
No comments:
Post a Comment