ஆடி மாதம் ஐந்தாவது வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி 31 வரலட்சுமி பூஜையை முன்னிட்டு ஸ்ரீ பத்மாவதி தாயாருக்கு, 50,001 ஒரு வளையல் அலங்காரம் - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 August 2024

ஆடி மாதம் ஐந்தாவது வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி 31 வரலட்சுமி பூஜையை முன்னிட்டு ஸ்ரீ பத்மாவதி தாயாருக்கு, 50,001 ஒரு வளையல் அலங்காரம்


வரலட்சுமி பூஜை அருள்மிகு ஶ்ரீனிவாச பெருமாள் திருக்கோவில்


தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் ஆடி மாதம் ஐந்தாவது வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி 31 வரலட்சுமி பூஜையை முன்னிட்டு ஸ்ரீ பத்மாவதி தாயாருக்கு, 50,001 ஒரு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு, பத்மாவதி தாயார்க்கு விஷேச திருமஞ்சனம் நடைபெற்று விஷேச பூஜை, மஹா தீபாரதனை ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்று பிரசாத வழங்கப்பட்டது.


சுமங்கலிகள் அனைவரும் தீர்க்க சுமங்கலியாக இருக்கவும், கல்யாண பிரார்த்தனை உள்ள பக்தர்களுக்கு அதிசீக்கரமாக கல்யாணம் அனுகூலமாகவும், குழந்தை பாக்கிய பிரார்த்தனை உள்ள பக்தர்களுக்கு அதிசீக்கிரமாக குழந்தை பாக்கியம் அனுகூலமாகவும் பிரார்த்தனை நடைபெற்றது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக போடிநாயக்கனூர் செய்தியாளர் மாரீஸ்வரன் மற்றும் தேனி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad