மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வீரபாண்டி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கால்நடை பண்ணை வளாகம் மற்றும் தீவன உற்பத்தி மையக் கட்டடங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா., இ.ஆ.ப., அவர்கள், குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்கள். உடன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தங்க தமிழ்செல்வன், அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) திரு.கே.எஸ். சரவணக்குமார் (பெரியகுளம்), கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் பி.என், ரிச்சர்டு ஜெகதீசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக போடிநாயக்கனூர் செய்தியாளர் மாரீஸ்வரன் மற்றும் தேனி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு...
No comments:
Post a Comment