ஜம்புலிபுத்துார் கதலி நரசிங்க பெருமாள் கோவிலில் 48வது நாள் மண்டலபூஜை . - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 28 August 2024

ஜம்புலிபுத்துார் கதலி நரசிங்க பெருமாள் கோவிலில் 48வது நாள் மண்டலபூஜை .

 


ஜம்புலிபுத்துார் கதலி நரசிங்க பெருமாள் கோவிலில் 48வது நாள் மண்டலபூஜை . 


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூரில் இந்து சமய அறநிலைத்துறைக்கு  கட்டுப்பட்ட கதலி நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது.


800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி நடைபெற்றது.


அதையடுத்து  கும்பாபிஷேகம் முடிந்தநாள் முதல் நேற்று முன்தினம் வரை ஒவ்வொரு நாளும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று 48 வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது.


இதையடுத்து யாகசாலை பூஜைகள் சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத ஆகம விதிப்படி  நடைபெற்றன. இதில் பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் பூஜிக்கப்பட்டு, கடங்கள் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து, மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது .தொடர்ந்து கதலி நரசிங்க பெருமாள் கோவிலில் மகா தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மற்றும் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லோகிராசன் முன்னிலையில் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad