தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர், டாக்டர் கலைஞர் அவர்களின் 6ம் ஆண்டு நினைவு தினம் : - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 August 2024

தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர், டாக்டர் கலைஞர் அவர்களின் 6ம் ஆண்டு நினைவு தினம் :

 


தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர், டாக்டர் கலைஞர் அவர்களின் 6ம் ஆண்டு நினைவு தினம் :


பெரியகுளம் திமுக நகர் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை:


தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர் ,டாக்டர் கலைஞர் அவர்களின் 6 ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு பெரியகுளம் திமுக நகர் கழகத்தின் சார்பில் கலைஞர் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணக்குமார் ஆகியோரது வழிகாட்டுதலின் படி பெரியகுளம் திமுக நகர் கழக செயலாளர் முகமது இலியாஸ் தலைமையில், மாவட்ட அவைத்தலைவர் பி.டி.செல்லப் பாண்டி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திமுக வினர் திரளாக கலந்து கொண்டு திமுக நகர் கழக அலுவலகத்தில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்று பெரியகுளம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பெரியகுளம் நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், நகர் கழக நகர அவைத்தலைவர் வெங்கடாசலம், பொருளாளர் சுந்தர பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் வைகை சரவணன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கார்த்திக் , நகர் கழக துணை செயலாளர்கள் சேதுராமன், சரவணன், வாசுகி, மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், ராஜபாண்டி, மற்றும் திமுக நகர் கழக நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  செய்தியாளர்   K.  பால்ராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad