ஆண்டிபட்டி கணவாய் தர்மசாஸ்தா கோவிலில் ஆடிப்பெருக்கு விழா.
ஆண்டிபட்டி , ஆக .4 -தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கணவாய் மலைப்பகுதியில் பழமை வாய்ந்த தர்ம சாஸ்தா திருக்கோயில் அமைந்துள்ளது .இக்கோவில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா இக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும். அதனை முன்னிட்டு நேற்று தர்மசாஸ்தாவிற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேங்காய் பழ தட்டுகளுடன் வந்து வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர் .பக்தர்கள் மொட்டை எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொண்டனர். ஆண்டிபட்டி பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் நடை பயணமாக வந்து தர்ம சாஸ்தாவை தரிசனம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொண்டனர் .விழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஹரிஷ் குமார் தலைமையிலான அலுவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகஸ்தர்கள் செய்திருந்தனர். ஆண்டிபட்டி டிஎஸ்பி சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
No comments:
Post a Comment