இறந்த வழக்கறிஞருக்கு நிதி உதவி வழங்கிய வழக்கறிஞர் சங்கம்
BAR COUNCIL OF INDIA ரூ.50,000 த்தை இறந்த வழக்கறிஞரின் குடும்பத்திற்கு வழங்கி வரும் நிலையில், வழக்கறிஞர்கள் சங்கம், பெரியகுளம் (21/ 2024) என வழக்கறிஞர்கள் சங்கம் ஆரம்பித்த சில மாதங்களிலேயே அருண்பாண்டியன் என்ற வழக்கறிஞர் இறப்பினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 50,000 த்தை வழக்கறிஞர்கள் சங்கம், பெரியகுளம் (21/2024) சார்பாக (தலைவர் காமராஜ், செயலாளர் சுதாகரன், பொருளாளர் ரத்தினவேல் பாண்டியன், இணைச் செயலாளர் பாண்டியராஜன்) வழங்கப்பட்டது ....
இறந்த வழக்கறிஞர் அருண்பாண்டியன் அனைவரிடத்திலும் அன்பாக பழகக் கூடியவர் கடின உழைப்பின் காரணமாக வழக்கறிஞர் படிப்பை முடித்து நீதிமன்றத்தில் வழக்காடி வரும் சில மாதங்களிலேயே இறந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடத்திலும் நீதிமன்ற சக வழக்கறிஞர் இடத்திலும் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது என அனைவரும் வருத்தத்துடன் தெரிவித்தனர் - இறந்த வழக்கறிஞர் அருண்பாண்டியன் தாயார் மற்றும் மனைவியிடம் வழக்கறிஞர் சங்கம் வழங்கிய தொகையை கொடுத்து அவர்களுக்கு ஆறுதல் கூறிய சம்பவம் நிகழ்ச்சி ஏற்படுத்தியது
No comments:
Post a Comment