தேனி மாவட்டத்தில் அடித்து விளையாடிய திமுக வடக்குமாவட்ட செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன் - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 11 August 2024

தேனி மாவட்டத்தில் அடித்து விளையாடிய திமுக வடக்குமாவட்ட செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன்

 


தேனி மாவட்டத்தில் அடித்து விளையாடிய திமுக வடக்குமாவட்ட செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன் 


தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட40 தொகுதிகளில் திமுக அமோகமாக வெற்றி பெற்றது 

 

40க்கு 40 என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு இந்த வெற்றி மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது


 நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள எந்த கட்சியின் விரும்பவில்லை சிறு சிறு கட்சிகளோடு போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள்"திமுக"வின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தோல்வியை தழுவினார்கள் - இந்த தேர்தலுக்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்களுடைய துல்லியமான அரசியல் கூட்டணிகட்டமைப்பு மிகப் பெரிய வெற்றியையும் உற்சாகத்தையும் கொடுத்தது -


  தேனி நாடாளுமன்ற தொகுதி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிய தொகுதி ஆகும் - கடந்த முறை 39 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றாலும் தேனிநாடாளுமன்ற தொகுதியில்மட்டும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவருடைய மகன் 


ப. ரவீந்திரநாத் வெற்றி பெற்றார் இதனால் இந்த முறை தேனி தொகுதியில் தனி கவனம் செலுத்தி வடக்கு மாவட்ட செயலாளர்  தங்க. தமிழ்ச்செல்வன் அவர்களை வேட்பாளராக களத்தில் இறக்கி விடப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற வைத்தார் 


தேனியில் அதிமுக மிகப்பெரிய பலத்துடன் இருந்த பொழுதும் குறிப்பாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இருக்கும் பெரியகுளம்சட்டமன்ற தொகுதியில் திமுக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். சரவணகுமார் அவர்களது சிறப்பான அரசியல் அணுகு முறையாலும்- தொகுதி மக்களுக்கு செய்த நலதிட்டம் மூலமாக மக்களின்செல்வாக்கை பெற்றுதிமுக அதிக வாக்குகளை பெற்று வெற்றிபெற்றது - இதன்மூலமாக அதிமுகஇரட்டை இலக்கு என்னிக்கையிலையே வாக்குகளை பெற்று பின்னடைவு பெற செய்தார் . 


பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே .எஸ். சரவணகுமார் தொடர்ந்து இந்த தொகுதியில் இரண்டு முறை வெற்றிபெற்றும் மூன்றாவதும் பெரியகுளம் தொகுதி எப்பொழுதும் திமுக வசம் தான் என்பதை மீண்டும்நிரூபித்து காட்டியுள்ளார் 


 தேனி தொகுதியில் அதிமுக மிகப்பெரிய தோல்வியடைந்தஇந்த சம்பவம் அதிமுக தொண்டர்களிடையே மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது -

 

திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளரான தங்க. தமிழ்ச்செல்வன் அவர்களை எதிர்த்து போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய நிறுவனர் டிடிவி. தினகரன் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார் இனி தேனி மாவட்டத்தில் திமுககூட்டணி கட்சிகளைதவிர வேறு எந்த கட்சிக்கும் செல்வாக்கு இல்லை என்பதை தங்க. தமிழ்ச்செல்வன் அவர்கள் பெற்ற வெற்றியின் மூலமாக நிரூபணம் ஆகி உள்ளது 

 

தேனி மாவட்டத்தில் திமுகவில் வடக்கு மாவட்ட செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன்  செயல்பாடுகள் - கம்பம் ஆண்டிபட்டி பெரியகுளம் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடைய செயல்பாடுகள் பொது மக்களிடம் மிகப் பெரிய எதார்த்த அரசியலை புரிய வைத்து அதன் மூலமாக திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது .


வெற்றி பெற்று தேனிநாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்ட தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் நாடாளுமன்றத்தில் தொகுதி மக்களுடைய முக்கிய கோரிக்கைகளை கன்னிப் பேச்சிலேயே எடுத்துரைத்தது திமுக விற்கும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் மிகப்பெரிய செல்வாக்கை உண்டாக்கி உள்ளது -

 

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் .போடி. ஆண்டிபட்டி .கம்பம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திமுகவே வெற்றியடையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை   


 தேனி மாவட்டத்திலிருந்து நமது சிறப்பு செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad