கடமலைக்குண்டு அருகே தானம் அறக்கட்டளை சார்பில் பாரம்பரிய நடைபயணம் மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறை குறித்து விளக்க கூட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 August 2024

கடமலைக்குண்டு அருகே தானம் அறக்கட்டளை சார்பில் பாரம்பரிய நடைபயணம் மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறை குறித்து விளக்க கூட்டம்.


கடமலைக்குண்டு அருகே தானம் அறக்கட்டளை சார்பில் பாரம்பரிய நடைபயணம் மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறை குறித்து விளக்க கூட்டம்.


ஆண்டிபட்டி, ஆக. 12 -தேனி மாவட்டம் தானம் அறக்கட்டளை தேனி மண்டலத்தின் சார்பாக கடமலைக்குண்டு அய்யனாபுரத்தில் உள்ள அய்யனாரப்பன் திருக்கோவிலில் வைத்து பாரம்பரிய நடைப்பயணம் மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறை, வாழ்வாதாரங்கள் குறித்து விளக்க கூட்டம் நடைபெற்றது . விழாவில்   கடமலைக்குண்டு வட்டார களஞ்சியத்தின் நிர்வாக இயக்குனர் சங்கவி வரவேற்று பேசினார். அய்யனார் சாமியின் வரலாறு  பற்றி சமூக ஆர்வலர்கள்  ஜெயராஜ் அவர்களும்,  காளியம்மாள் அவர்களும் எடுத்துக் கூறினார்கள்.தானம் அறக்கட்டளையின் நோடலும், மற்றும் உத்தமபாளையம் உழவர் உற்பத்தியாளர்  நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ராமசாமி அவர்கள் பாரம்பரிய நடைபயணம் பற்றியும் ,பாரம்பரிய வாழ்க்கை முறை பற்றி சிறப்புரையாற்றினார்.சிறப்பு விருந்தினராக ஆண்டிபட்டி வட்டார உதவி வேளாண் அலுவலர்  குமரேசன் அவர்கள் கலந்துகொண்டு பாரம்பரிய நடைமுறை வாழ்க்கை பற்றி சிறப்புரையாற்றினார்.  இந்த நிகழ்ச்சியில் சிறுதானியத்தில் மதிப்புக்கூட்டி செய்யப்பட்ட கம்பு ,லட்டு, பாசிப்பயரும் ,மூலிகை சூப் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கடமலைக்குண்டு வட்டாரக் களஞ்சியத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் .நிகழ்ச்சியில் கடமலைக்குண்டு  வட்டாரக்களஞ்சியத்தின் கணக்கர் தேவி நன்றி கூறினார் .விழா ஏற்பாட்டினை கடமலைக்குண்டு வட்டாரக்களஞ்சிய பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad