ஆண்டிப்பட்டியில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு யானை முகமூடி அணிந்து ஊர்வலமாக சென்ற பள்ளி மாணவர்கள். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 August 2024

ஆண்டிப்பட்டியில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு யானை முகமூடி அணிந்து ஊர்வலமாக சென்ற பள்ளி மாணவர்கள்.


ஆண்டிப்பட்டியில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு யானை முகமூடி அணிந்து ஊர்வலமாக சென்ற பள்ளி மாணவர்கள்.


ஆண்டிபட்டி, உலக யானைகள் தினத்தை முன்னிட்டு ஆண்டிப்பட்டியில் வனத்துறை சார்பாக யானைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.  தேனி மாவட்ட வன அலுவலர் சமர்த்தா ஊர்வலத்தை கொடியை அசைத்து தொடங்கி வைத்தார். ஆண்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 500 மாணவர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.  மாணவர்கள் அனைவரும் யானை முகம் பொருந்திய முகமூடி அணிந்தபடி ஊர்வலமாக சென்றனர். முன்னதாக உலக யானைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு   கட்டுரை, ஓவியம், மற்றும் வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் உடன் கேடயம் வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆண்டிப்பட்டி வனச்சரக அலுவலர்  அருள்குமார் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர்  ரெங்கராஜன், பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் லோகேஷ் குமார், ஆண்டிபட்டி நகர் நல கமிட்டி தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். பள்ளி ஆசிரியர்கள்,  வனப்பணியாளர்கள்,  தன்னார்வலர்கள் மற்றும் பொது மக்கள் பலர்கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad