ஆண்டிபட்டியில் அதிமுக கழக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா.
ஆண்டிபட்டி, தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக கழக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் முன்னிலை வகித்தார். பேரூர் கழகச் செயலாளர் அருண்மதி கணேசன் வரவேற்று பேசினார். அதனைத் தொடர்ந்து கழக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி ,மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயக்குமார், தேனி மாவட்ட இணை செயலாளர் முத்துலட்சுமி, துணைச்செயலாளர் சோலைராஜ், மாவட்ட பொருளாளர் வைகை பாண்டி, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் பாலச்சந்தர். உள்பட பலர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி ,வாழ்த்தி பேசினார்கள். நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட ,ஒன்றிய ,நகர ,கிளைக் கழக, சார்பு அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment