நீர்நிலை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம்: பெரியகுளம் போலீஸார் வேண்டுகோள்:
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதி பொதுமக்களுக்கு பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் அவர்கள் கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கும்பக்கரை அருவி, பாம்பாறு, கல்லாறு, வராகநதி உள்ளிட்ட ஆறுகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகின்றது. ஆகவே பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் ஆற்று பகுதி மற்றும் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று பெரியகுளம் கும்பக்கரை அருகே உள்ள அழகுபாறை பகுதியில் ஆற்றில் குழந்தைகளுடன் குழிக்கச்சென்ற நபர்கள் திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கிய நபர்களை பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான போலீஸார் கயிறு மூலம் வெள்ளத்தில் சிக்கிய நபர்களை பத்திரமாக மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொது மக்களின் நலன் கருதி எந்த ஒரு இடத்திற்க்கும் நேரில் சென்று ஆய்வு செய்யும் பாஸ்டின் தினகரன் அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
செய்தியாளர்
K. பால்ராஜ்.
No comments:
Post a Comment