தென்கரை நூற்றாண்டு நூலகத்தில் ஆதார் சிறப்பு முகாம்: சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணக்குமார் துவக்கி வைத்தார்: - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 August 2024

தென்கரை நூற்றாண்டு நூலகத்தில் ஆதார் சிறப்பு முகாம்: சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணக்குமார் துவக்கி வைத்தார்:

 


தென்கரை நூற்றாண்டு நூலகத்தில் ஆதார் சிறப்பு முகாம்: சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணக்குமார் துவக்கி வைத்தார்:


 தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை நூற்றாண்டு முழுநேர கிளை நூலகத்தில் இந்திய அஞ்சல் துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம் துவக்கப்பட்டது.  பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே .எஸ் .சரவணக் குமார்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆதார் சிறப்பு முகாமினை துவக்கி வைத்து அஞ்சலக சேமிப்பு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு, செல்வமகள் சேமிப்பு கணக்கு, மூத்த குடிமக்கள் கணக்கு, குறித்த கால வைப்புத்தொகை உள்ளிட்ட அஞ்சலக பயன்கள் குறித்தும்,மலை கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கடித வழி போக்குவரத்து குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் பொதுமக்கள் பலரும் போதிய விழிப்புணர்வு இன்றி போலி நிதி நிறுவங்களின் கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி பணங்களை டெபாசிட் செய்து அவற்றை இழந்து வருவது தொடர்கிறது -இந்திய அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்குகள் துவங்கி பொதுமக்கள் பயனடைந்திட வேண்டுமாய் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவகுமார், பெரியகுளம் நகர் கழக செயலாளர் முகமது இலியாஸ்,வாசகர் வட்ட தலைவரும், நூலக ஆர்வலருமான அன்புக்கரசன், வழக்கறிஞர் மணி கார்த்திக், நூலகர்குமரன் நல்நூலகர் சவுடை முத்து, தேனி மாவட்ட அஞ்சலக துணை கோட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ், பெரியகுளம் தலைமை அஞ்சலக அதிகாரி விக்னேஷ் சுந்தர் ,பெரியகுளம் தலைமை அஞ்சலக துணை அதிகாரி பாக்யராஜ், பெரியகுளம் அஞ்சலக ஊழியர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 செய்தியாளர்

 K. பால்ராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad