கடமலைக்குண்டுவில் களஞ்சியம் அமைப்பின் சார்பில் பொதுக்குழு கூட்டம் - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 August 2024

கடமலைக்குண்டுவில் களஞ்சியம் அமைப்பின் சார்பில் பொதுக்குழு கூட்டம்

 


கடமலைக்குண்டுவில் களஞ்சியம் அமைப்பின் சார்பில் பொதுக்குழு கூட்டம் 


தேனி மண்டலத்தில் கடமலை களஞ்சியம் வட்டார சங்கத்தின்  29 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோலாகலமாகவும் ,பாரம்பரிய முறையில் ,பாரம்பரிய கலைகளுடன் நடைபெற்றது. கடமலைக்குண்டு வட்டார களஞ்சிய செயலாளர்  காளியம்மாள் வரவேற்று பேசினார்.  கடமலைக்குண்டு   காவல் ஆய்வாளர் வனிதா ,பொது மருத்துவர்  சிந்து, சட்ட உதவி ஆலோசகர் வழக்கறிஞர் முருகேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  

         

தேனி மண்டல ஒருங்கிணைப்பாளர் வித்யா  ஆண்டு பொது குழு கூட்டத்தின் நோக்கம் மற்றும் செயல் திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறினார்.உத்தமபாளையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ராமசாமி  வட்டாரத்தின்(ஆண்டிப்பட்டி, போடி, சின்னமனூர், பெரியகுளம்) மற்றும்அனைத்து தானம் பணியாளர்களும் கலந்து கொண்டனர். கடமலை களஞ்சியம் உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக பரஸ்பர வட்டாரச் செயலாளர்  ராஜலட்சுமி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad