ஆண்டிபட்டி நன்மை தருவார்கள் கோவிலில் ஆடிப்பூர விழா.
ஆண்டிபட்டி, அக். 8 -தேனி மாவட்டம் ஆண்டிபட்டி -தேனி தேசிய நெடுஞ்சாலை அருகே நன்மை தருவார்கள் திருக்கோயில் உள்ளது. இந்த கோவிலில் 49 அடி உயர சர்வ சக்தி மாகாளியம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அம்மன் அவதரித்த ஆடிப்பூர நன்னாளில் மாகாளியம்மனுக்கு வளையல் அணிவித்து சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.
அதன் அடிப்படையில் நேற்று சர்வ சக்தி மாகாளியம்மன் பீடத்தில் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் அம்மனுக்கு வளையல் அணிவிக்கப்பட்டது .அதனை தொடர்ந்து எலுமிச்சம்பழம் மாலை அணிவிக்கப்பட்டு ,சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். பெண்கள் விரதம் இருந்து மாங்கல்யம் ,மஞ்சள் ,குங்குமம் ,வளையல்களை வந்திருந்த பக்தர்களுக்கு வழங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். இங்கு வழிபட்டு குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் நேற்று வந்திருந்து குழந்தையை அம்மன் முன் வைத்து வழிபட்டனர் .மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை விழா குழுவினர் செய்தனர்.
No comments:
Post a Comment