பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போரட்டம், செப்டம்பர் 27ஆம் தேதி ஒரு நாள் விடுப்பு வேண்டி ஊராட்சி செயலர்கள் ஆண்டிபட்டி ஆணையாளரிடம் மனு.
தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அந்தந்த கிராமத்தில் ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர் பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் ஊராட்சி செயலர்கள் பணிபுரிந்து வருகின்றனர் .இந்த ஊராட்சி செயலர்கள் பதிவுறு எழுத்தர் என்ற நிலையில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஊராட்சி செயலர்கள் தமிழக அரசின் பென்ஷன் திட்டத்தில் இணைக்கப்படவில்லை .ஊராட்சி செயலர்கள் தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க பட வேண்டும் உள்ளிட்ட ,இதுபோன்ற பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கடந்த 21ஆம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக அரசுக்கு கடிதம் அனுப்பி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தற்போது மூன்றாம் கட்டமாக வரும் 27ஆம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு மாநில அளவிலான பெருந்திரள் முறையீட்டு இயக்கம் நடத்துவது என்று தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் போராட்டத்திற்கு செல்ல விடுப்பு வேண்டி கடிதம் கொடுத்து அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மனு கொடுத்து வருகின்றனர் .அதன்படி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சரவணன் அவர்களிடம் ஒரு நாள் விடுப்பு வேண்டி, ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் குமரேசன் மற்றும் மாவட்ட தலைவர் பாலமுருகன், ஒன்றிய தலைவர் மார்க்கண்டன் தலைமையில் ஊராட்சி செயலர்கள் மனு கொடுத்தனர்.
மூத்த செய்தியாளர்: தவமணி
No comments:
Post a Comment