தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சார்பில் மீட்பு ஒத்திகை ...
ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலத்தில் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக ஆறுகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் இருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் வெள்ளத்தில் சிக்கி இருக்க கூடிய நபர்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் காப்பாற்ற வேண்டும் என பெரியகுளம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில் மீட்பு ஒத்திகை நடைபெற்றது
இந்த நிகழ்ச்சி பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள வராக நதி ஆற்று படுகையில் வாழும் பொதுமக்கள் இடையே இந்த ஒத்திகை நடத்தப்பட்டது
இந்த ஒத்திகை மூலமாக பொது மக்களிடையே விழிப்புணர்வு மற்றும் மீட்பு பணியை சம்பந்தமாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டது இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment