திமுக சார்பில் அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 September 2024

திமுக சார்பில் அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

 


திமுக சார்பில் அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவிப்பது வழக்கம் - இதில்திமுக -அதிமுக ஓபிஎஸ் அணி என தனித்தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருவதை தொடர்ந்து இன்று பெரியகுளத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திரு தங்க தமிழ்ச்செல்வன் . தேனி மாவட்ட அவைத்தலைவர் பி.டி. செல்லபாண்டியன் - பெரியகுளம் ஒன்றிய செயலாளர் எல்எம்.பாண்டியன் . மாநில மீனவர் நலவாரிய உறுப்பினர்  குள்ளபுரம் முருகன்  பெரியகுளம் திமுக நகர்கழக செயலாளர் கே. முகமது இலியாஸ் - நகர அவைத் தலைவர் வெங்கடாசலம் .


திமுக நகரதுணைச் செயலாளர் எம். சேதுராமன் மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார் . ராஜபாண்டியன் . நகர பொருளாளர் சுந்தரபாண்டியன் . பெரியகுளம் நகர் மன்ற தலைவர் சுமிதாசிவக்குமார் ஆகியோர் ஊர்வலமாக சென்று பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்-


 இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகளும் சார்பணி நிர்வாகிகளும் நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் சார்பு பணி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள் 

 

இந்நிகழ்ச்சிக்கு முன்பாக தேனி - பெரியகுளம் பிரதான சாலையிலிருந்து  ஊர்வலமாக நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் வருகை தந்து திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான தங்க. தமிழ்ச்செல்வன் அவர்கள் மாலை ஆகிவிட்டது பொதுமக்கள் அடியே பெரும் வரவேற்பை பெற்றது

No comments:

Post a Comment

Post Top Ad