ஆண்டிபட்டி அருகே ஜக்கம்மாள் பட்டியில் அருள்மிகு சிவனம்மாள் கோவில் மகா கும்பாபிஷேகம் .
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் ஜக்கம்மாள் பட்டியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ சிவனம்மாள் சுவாமி ,ஸ்ரீ கருப்பசாமி, கன்னிமார்கள் சுவாமிகள் கோவிலின் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவில் முன்பாக யாகசாலை பூஜைகள் நடந்து ,பூர்ணாகுதி செய்யப்பட்டு ,மகாதீப ஆராதனை காட்டப்பட்டது .அதனை தொடர்ந்து பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் பூஜிக்கப்பட்டது. பின்னர் கோவிலில் இருந்து கடங்கள் புறப்பாடாகி, விமான கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டது. அதனை தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் உள்ள மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர் .அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை சங்கு தேவர் கொத்து வழிக்கு பாத்தியப்பட்ட பங்காளிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment