தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விநாயகர்சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம்
இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா மதுரை மெயின் ரோட்டில் ஆரம்பித்து பெரியகுளத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வாகனங்களில் சிலைகளை வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று தென்கரை பெரிய கோவிலில் வைத்தனர்
இந்த விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்
ஊர்வலத்தில் வருகை தந்த அனைத்து வாகனங்களையும் ஒழுங்குபடுத்தி அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் பெரியகுளம் காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்
No comments:
Post a Comment