ஆண்டிபட்டி அருகே கொண்டம நாயக்கன்பட்டியில் நடைபெறும் சிமெண்ட் சாலை பணியை தடுக்கும் தனிநபர். கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம். பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி வார்டுகளில் ,பேரூராட்சி சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ,சிமெண்ட் சாலைகள், தார் சாலைகள், வடிகால் வசதி உள்ளிட்டவைகளுக்காக ரூபாய் ஒரு கோடியே 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் கொண்டமநாயக்கன்பட்டி வேலாண்டி கவுண்டர் 1வது தெருவில், வடிகாலுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தனி நபர் ஒருவர் பணிகளை செய்ய விடாமல் தடுத்ததால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த தெருவில் வசிக்கும் பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்தில் முறையிட்டு, உடனடியாக வடிகாலுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்க வலியுறுத்தினர். ஆனால் பேரூராட்சி நிர்வாகத்தினர் இது குறித்து தொடர்ந்து மௌனம் ? காத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியரிடமும் இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றும் வகையில் வடிகால் உடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment