தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பேரறிஞர் அண்ணா உருவம் பொறித்த திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்மீது மறைத்து பாரதிய ஜனதா கட்சியினர் ஒட்டிய போஸ்டரை கிழித்து அப்புறப்படுத்திய திராவிட விடுதலை கழக நிர்வாகிகள் : பரபரப்பு......
பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் உருவம்பொறித்த போஸ்டர் நேற்று இரவு ஒட்டப்பட்டது. இந்த போஸ்டரை மறைத்து பாரதிய ஜனதா கட்சியினர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் போஸ்டரை ஒட்டி மறைத்துள்ளனர் இத்தகவலை அறிந்த திராவிடர் விடுதலைக்கழக நிர்வாகி தலித்ராயன் மற்றும் தமிழரசி தலைமையிலான நிர்வாகிகள் திரண்டு வந்து அறிஞர் அண்ணாவின் உருவம் குறித்த போஸ்டரை மறைத்து ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்து அப்புறப்படுத்தினர் இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
No comments:
Post a Comment