பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் திருவாசகம் முற்றோதுதல், ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவர்கள் குடும்பத்தார்கள் சார்பில் திருவாசகம் முற்றோதுதல், ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இவ்வைபவத்தை முன்னிட்டு காலையில் யஜமான ஸங்கல்பம், கணபதி ஹோமம், விக்னேச்வர பூஜை, புண்யாஹவாசனம், கோ பூஜை, ஸ்ரீஸுக்த ஜபம் தீபாராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து
எங்கும் நிறைந்த மங்கள பொருளாகிய சிவத்தை ஓதி உணர்வதற்கான மாணிக்கவாசக பெருமாள் அருளிய திருவாசக. முற்றோதுதலை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் திருவாசக முற்றோதுதலில் உள்ள
51 பதிகத்தில் 658 பாடல்களை 200க்கும் மேற்பட்ட அல்லிநகரம் சிவனடியார் திருக்கூட்டத்தினர் மனமுருகி பாடினர். அதனைத் தொடர்ந்து ஸ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இவ்விழாவில் கைலாசநாதர் திருக்கோவில் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் பசுமை உலகம் வி.ப.ஜெயபிரதீப் உள்ளிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தேனி மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்: முத்துகிருஷ்ணன்
No comments:
Post a Comment