ஆண்டிபட்டியில் வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்
ஆண்டிபட்டி, நவ. 27, தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாம் கட்ட பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆண்டிபட்டி வட்டாட்சியர் கண்ணன் தலைமை தாங்கினார். முதுநிலை, இளநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசாணையை உடனே வெளியிட வேண்டும், மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இரண்டு ஆண்டுகளுக்கான துணை ஆட்சியர் பட்டியல் மற்றும் நடப்பாண்டிற்கான மாவட்ட வருவாய் அலுவலர் பட்டியலை விரைந்து வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம் என்று வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment