பெரியகுளம் காடுகளில் வாழும் பழங்குடியினருக்கு சூரியசக்தி மின்விளக்குகள் வழங்கும் விழா.
பெரியகுளம் டிச 16 காடுகளில் வாழ்ந்து வரும் 37 பழங்குடி குடும்பத்தினருக்கு சூரிய சக்தி மின்விளக்குகள் வழங்கும் விழா இன்று சோத்துப்பாறை அணை அரசு துவக்கப்பள்ளி அருகே நடைபெற்றது.
பளியர் பழங்குடிகள் பெரியகுளத்தை ஒட்டிய அகமலையில் குறவன் குழி, கரும்பாறை, பேச்சியம்மன் சோலை காடுகளில் தேன், கிழங்கு, ஈஞ்சம்புல் உள்ளிட்ட சிறுவனப் பொருட்களை சேகரித்து விற்பனை செய்வதுடன் இயற்கை விவசாயம் செய்தும் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் இவர்கள் சோத்துப்பாறை அணைக்கட்டு பகுதி வனப்பகுதிகளிலும் தனியார் நிலங்களிலும் தங்கி விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர் .
இவர்களில் 31 குடும்பத்திற்கு சோத்துப்பாறை அணையில் இருந்து அகமலை செல்லும் சாலையை ஒட்டிய வனப்பகுதியில் வீட்டு மனைப்பட்டா அண்மையில் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.
இதுவரை மின்சார வசதி இல்லாத இம்மக்களுக்கு சென்னை பாலம் அமைப்பின் மூலமாக 37 குடும்பங்களுக்கு சூரிய சக்தி மின்விளக்குகள், பேனல், பேட்டரி மற்றும் பெட்சீட் ஆகியவை கென்கல் நிறுவனத்தின் "சமூக பங்களிப்பு நிதியில் இருந்து ரூ 4 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கும் விழா நடைபெற்றது .
மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினர் லீலாவதி தனராஜ் பழங்குடி குடும்பங்களுக்கு பொருட்களை வழங்கி உரையாற்றினார். வனக்குழு தலைவர் சொக்கன் அலை கண்ணன் தலைமை தாங்கினார். கென்கல் அமைப்பின் ராம்குமார், பழங்குடி தலைவர்கள் சடையன், சங்கிலி (மாநில பழங்குடி வாரிய உறுப்பினர்) அனீஸ் குமார் ஆகியோர் பேசினர். பாண்டி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment