ஆண்டிபட்டியில் மதுரை - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நன்மை தருவார்கள் திருத்தலத்தில் தர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கொடியேற்ற விழா.
ஆண்டிபட்டி, டிச. 19 -தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள மதுரை - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் அருகில் அமைந்துள்ள நன்மை தருவார்கள் திருத்தலத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமிக்கு வரும் 27ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து கோவிலில் உள்ள 49 அடி உயர சர்வ சக்தி மாகாளியம்மனுக்கு 108 குடம் பாலாபிஷேகமும் மற்றும் பூச்சொரிதல் விழாவும் நடைபெற உள்ளது.
மேலும் அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள குதிரை மேல் இருக்கும் அய்யனார் , ஸ்ரீ பத்ரகாளியம்மன் ,ஸ்ரீ குபேர காளியம்மன் ,ஸ்ரீ கௌமாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. எனவே இதனைத் தொடர்ந்து நேற்று கோவில் வளாகத்தில் கொடிமரம் பூஜிக்கப்பட்டு, கொடியேற்றம் நிகழ்ச்சி ,அறங்காவலர் டாக்டர் எஸ்.பி.எம். செல்வம் தலைமையில் நடைபெற்றது. விழாவில் நிர்வாகிகள் சீனியப்பன், சௌந்தரபாண்டி ,பெருமாள் சாமி, மனோஜ் குமார், பசுமை ஆடை பக்தர்கள், சுரேஷ் ,பழனிக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி முத்து வன்னியம் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment